
விநாயகர் ஸந்தோஷமடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள்
அனைத்தும் கிடைக்கும். இந்திரன் ஸந்தோஷமடைந்தால் சுவர்க்கத்தின் ஸம்பத்துகள்
கிடைக்கும்.
குரு இவர்களையெல்லாம்விடச் சிறப்பானவர். ஸந்தோஷமடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய
பிரம்மத்தையே காட்டிக்கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.
இந்த இனிமையான கதையைக் கேட்டால், ஸம்ஸார துக்கங்கள் அனைத்தும் மறந்துபோய்விடும்.
நம்பிக்கையுடன் படியுங்கள் பலன் கைமேல்..........
ஓம் ஸ்ரீ சாயி காமாதி ஸர்வ அஜ்ஞான த்வம்ஸினே நமஹ |
My humble salutation to Him who destroys the six foes - Desire, Anger,
Greed, Hatred, Pride and Lust.
காமத்தை (ஆசையை) முதலாகக்கொண்ட எல்லா அறிவீனங்களையும் அழிப்பவருக்கு
நமஸ்காரம்.
இக் கதாமிருதம் சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள்
பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவர். ........என்பது
திண்ணம்....
ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான
வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.................
இது வெறும் வாழ்க்கைச் சரித்திரம் அன்று; சந்திரகாந்தக் கல் ஆகும். இதிலிருந்து ஸாயீயின்
கதைகள் என்னும் சந்திரனுடைய அமிருதம் சதா பொழிந்துகொண்டே யிருக்கிறது. தாகம் கொண்ட
சகோரப் பட்சிகளை ஒத்த பக்தர்கள், மனம் நிறையும் வரை அருந்தித்
திருப்தியடைவீர்களாக.....
அன்பார்ந்த நேயர்களே இப்பொழுது ஸாயீயின் புனிதமான கதைகளை மனமொன்றிச்
சுணக்கமேதுமின்றிக் கேளுங்கள். கலியுகத்தின் மலங்களை எரித்துவிடும் சக்திவாய்ந்தவை
இக் கதைகள்.
ஸாயீயிடம் அனன்னிய நிட்டை ஏற்பட்டுவிட்ட பக்தனின் விருப்பங்களை எல்லாம் ஸாயீ
நிறைவேற்றிவைக்கிறார்; விரும்பாதவற்றையும் கஷ்டங்களையும் நிவாரணம் செய்துவிடுகிறார் இது சத்தியம்.
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த
ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
95.ஓம் ஸ்ரீ சாயி காமாதி ஸர்வ அஜ்ஞான
த்வம்ஸினே நமஹ |
காமத்தை (ஆசையை) முதலாகக்கொண்ட எல்லா அறிவீனங்களையும் அழிப்பவருக்கு
நமஸ்காரம்.
மனிதனின் உள் எதிரிகள் ஆறு. அவையாவன : காமம், குரோதம், மோஹம், லோபம், மதம் (செருக்கு, வெறி), மாச்சரியம். இவற்றையும்
அறிவீனங்களாகவே கருதி நாமம் இயற்றியிருக்கிறார் பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி. இவை
மட்டுமின்றி எல்லா அறிவீனங்களையுமே பாபா அழித்துவிடுவார் எனப் பொருள்கொள்ளவும்
இடமுண்டு.
OM KAMADI SHAD-VAIRI DHWAMSINE NAMAH
ॐ कामादि षङ्वैरिध्वंसिने नमः
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர்
மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 16 தொடர்கிறது……….
*
*
*
=========================================
''பிரம்மத்தை
அறியவேண்டுமென்ற உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைஸாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை
நிறைவேற்றிவைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்.ஃஃ
33 ஆயினும், பிரம்மத்தை
அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு
சிர்டீக்குக் கிளம்பிவிட்டார்õ இவ்விதமாக ஸாயீயின் பாதங்களுக்கு வந்துசேர்ந்தார்.
34 ஸாயீயை தரிசனம்
செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, ஸாயீ அவருக்குச் சொன்ன
மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.
35 ஸாயீயின் கதைகள் என்னும்
கற்பக விருக்ஷத்திற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி
வளர்ந்து பலப்பலவிதமான பழங்களை உற்பத்தி செய்யும்.
36 இம் மரத்தின் எல்லாப்
பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள்
அனைத்தும் நிறைவேறும்.
37 அப்பொழுது அவர் சொன்னார், ''பாபா, தயவுசெய்து எனக்கு
பிரம்மத்தைக்
(முழுமுதற்பொருளைக்)
காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கிறேன். சிர்டீ பாபா தாமதமேதுமின்றி
உடனே பிரம்மத்தைக் காட்டுகிறார் என்று
சொல்கிறார்கள்.--
38 ''இதற்காகவே நான்
நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது
எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தவனாவேன்.ஃஃ
39 பாபா கூறினார், ''கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு
உடனே பிரம்மத்தைக் காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது.
உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிதுõ--
40 ''செல்வத்தையோ, ஸம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜ்ஜியபதவியையோதான்
மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.--
41 ''கேவலம் உலக சுகங்களை
நாடியே மக்கள் சிர்டீக்கு ஓடிவருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும்
பிரம்மம் வேண்டுமென்று கேட்பதில்லை.--
42 ''இம்மாதிரியான மக்கள்
(சுகம் நாடுபவர்) ஏராளம்; உம்மைப் போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா
என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும்.--
43 ''பிரம்மத்திற்கு பயந்தே
சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள்.
உதயமாவதும் அஸ்தமனமாவதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில்
நடக்கிறது.--
44 ''அவ்வாறே கோடைக்காலம், வஸந்தகாலம், குளிர்காலம் போன்ற
பருவகாலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக்
காப்பதற்காக எட்டுத்திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட1 பாலகர்களும் தங்களுடைய
கடமைகளைச் செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்திற்கும் மூலம் பிரம்மமேõ--
45 ''ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப்
போகுமுன் ஞானம்பெற்றவன், மனிதவாழ்வின் குறிக்கோளாகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு-இறப்பு என்னும்
சுழல் அவனை விடாது துரத்துகிறது.--
46 ''பிரம்மத்தை அறியுமுன்னரே
இந்த உடல் வீழ்ந்துவிட்டால், ஸம்ஸார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்துசெல்லும்.
மறுபடியும் பிறவியெடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். --
47 ''நான் உமக்கு பிரம்மத்தை
மட்டுமன்று, பிரம்மச்சுருளையே காட்டுகின்றேன். நகத்திருந்து சிகைவரை உம்மை
மூடிக்கொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்.ஃஃ
48 ஓõ தேவாமிருதம் போன்ற
இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; ஸந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையுங்கூடத்
தூக்கிவிடும் சக்தியுடையது.
49 பாபாவின் அமுதமொழிகளின்
சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள்கூட, சாஸ்திரங்களில்
விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.
50 விநாயகர் ஸந்தோஷமடைந்தால்
(நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன்
ஸந்தோஷமடைந்தால் சுவர்க்கத்தின் ஸம்பத்துகள் கிடைக்கும்.
51 குரு
இவர்களையெல்லாம்விடச் சிறப்பானவர். ஸந்தோஷமடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய
பிரம்மத்தையே காட்டிக்கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.
52 இந்த இனிமையான காதையைக்
கேட்டால், ஸம்ஸார துக்கங்கள் அனைத்தும் மறந்துபோய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு
என்ன பாடம் சொல்க்கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்குத் தெரியாதாõ
53 ஆகவே, பாபா அவரை உட்காரச்
செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியைத் தாம் மறந்துவிட்டதுபோல அவருக்குத்
தோன்றும்படி செய்தார்.
54 பிறகு பாபா என்ன
செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, ''போ, சீக்கிரமாகப் போய் நந்துவுக்கு2 இந்தச் செய்தியைச்
சொல்.--
55 ''பாபாவுக்கு அவசரமாக ஐந்து
ரூபாய் கடனாகத் தேவைப்படுகிறது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன்
திருப்பிக் கொடுக்கப்படும்.ஃஃ
56 பையன் நந்து மார்வாடியின்
வீட்டிற்குச் சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பிவந்து
பாபாவிடம் செய்தி சொன்னான்.
57 பாபா கூறினார், ''மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக்கடைகாரர்
பாலாவிடம். அநேகமாக அவர் வீட்டிருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல்.
சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக்கொண்டு வா. போய் வாõஃஃ
58 இந்த நடையும் வியர்த்தமாகப்
போயிற்று. பாலா வீட்டில் இல்லைõ நடந்ததையெல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.
59 பாபா அவசரமாக இன்னும்
ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும்
இங்கும் ஓடுவதில் களைத்துப்போனானே தவிர, ஒரு பைஸாவும் கொண்டுவரவில்லை.
60 நந்துவோ, பாலாவோ, மற்றவர்களோ வீட்டில்லை
என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும்
அறிந்திருந்தார்.
=========================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட்
பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம்
தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 16
*
*
*
===========================================
"it is not easy to know Brahman, and especially so for an avaricious
man like you, who is always engrossed in wealth, wife and children. Who will,
in your quest of Brahma-Jnana, satisfy you that won't give away even a pice in
charity?"
Not minding his friend's advice, the fellow engaged a return-journey tanga
and came to Shirdi. He went to the Masjid, saw Sai Baba, fell at His Feet and
said, "Baba, hearing that You show the Brahman to all who come over here
without any delay, I have come here all the way from my distant place. I am
much fatigued by the journey and if I get the Brahman from You, my troubles
will be well-paid and rewarded." Baba then replied, "Oh, My dear
friend, do not be anxious, I shall immediately show you the Brahman; all My
dealings are in cash and never on credit. So many people come to Me, and ask
for wealth, health, power, honour, position, cure of diseases and other
temporal matters. Rare is the person, who comes here to Me and asks for
Brahma-Jnana. There is no dearth of persons asking for wordly things, but as
persons interested in spiritual matters are very rare, I think it a lucky and
auspicious moment, when persons like you come and press Me for Brahma-Jnana. So
I show to you with pleasure, the Brahman with all its accompaniments and
complications."
Saying this, Baba started to show him the Brahman. He made him sit there
and engaged him in some other talk or affair and thus made him forget his
question for the time being. Then He called a boy and told him to go to one
Nandu Marwari, and get from him a hand-loan of Rs. five. The boy left and
returned immediately, saying that Nandu was absent and his house ws locked.
Then Baba asked him to go to Bala grocer and get from him, the said loan. This
time also, the boy was unsuccessful. This experiment was repeated again twice
or thrice, with the same result.
===========================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர்
மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 16 தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி
அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது
மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும்
ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது
வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும்
எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா
உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே
இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த
ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment