Followers

Saturday, February 22, 2020



அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…

Awaken the Divine within you......Love All, Serve All
கோபமே பாபத்திற்கு ஆதாரம், ஆகவே கோபத்தை அடக்க வேண்டும் பொறுமையின்மையே கோபாத்தின் அடிப்படை,
கோபம் வரும் போது நாம் பொறுமை காக்க முயல வேண்டும்.
.உடனே ஓரு அறையில் உள் சென்று கதவைப் பூட்டி விட்டு ஒரு குவளை குளிர்ந்த நீர் எடுத்து மெதுமெதுவாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும் பின் சிறிது ஓய்வெடுத்து பின் சத்தமிட்டு சிரியுங்கள் நம் முட்டாள்தனத்தை எண்ணி ....
இக்கோபத்தை கட்டுப்படுத்தாவிடில் அது விபரீத விளைவுகளை நிச்சயம் உண்டு பண்ணும் அதை சீர்செய்ய முடியாமல் போகலாம்.....நீண்ட காலம் வருந்த வேண்டி வரலாம்...இதை பழக்கப்படுத்துவது முதலில் கடினம்தான் படிப்படியாக பழகி அமைதி பிறக்கும்.....ஓம் ஸ்ரீ சாயி ராம் சுவாமி உபதேசம்..இது.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.
பரிமேலழகர் உரை:
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும்
கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.).
மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.
Translation:
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall slay.
Explanation:
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him...............
Intolerance is the product of anger, hate and envy. Try your best to suppress the first appearance of anger. It does not come upon you unaware. The body becomes warm, the lips twitch, the eyes redden – so, when you get the intimation, drink a glass of cold water, sip it slowly, close the door and relax until the seizure passes away, and you laugh at your folly. This may appear difficult, but you have to practice it, for, the consequences of your yielding to anger will be so disastrous that you will have to repent long for them
.
(From : Sai Veda, The Word of God by Ramadas Gollapudi)

Awaken the Divine within you...
Love All, Serve All

=================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...