தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்கள், தஞ்சை நகரில் பல தெருக்களுக்கு, தொழிலாளர்களின் பெயர்களை சூட்டி, புரட்சி செய்துள்ளனர்.
வண்டிக்காரத் தெரு, வாணக்காரத் தெரு, வைக்கோல்காரத் தெரு, கீரைக்காரத் தெரு, அரிசிக்காரத் தெரு, பாம்பாட்டித் தெரு, கொல்லுப்பட்டறைத் தெரு, பாவுக்காரத் தெரு, புல்லுக்காரத் தெரு, பூக்காரத்தெரு, அம்பலக்காரத் தெரு.
- இவையெல்லாம் தஞ்சை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள்.
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே...............................
இறந்தவரின் குடும்பம் துக்கத்திலும், எதிர்காலத்தை இனி, எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்...' என்ற கவலையிலும் அழும் போது, அங்கேயும், 'குடி'க்கு அச்சாரமிடும் 'குடி' மகன்களை நினைத்தால், அருவருப்பாக இருக்கிறது.
.....
=====================================
'நடிகவேள் ராதா' என்ற நூலிலிருந்து: ஒருமுறை, எம்.ஆர்.ராதாவுடன், வி.கே.ராமசாமி மற்றும் திருவாரூர் ராமசாமி ஆகியோர் ஒரு நாடகத்தில் நடிப்பதற்காக புதுச்சேரியில் தங்கியிருந்தனர். அன்று, புதுச்சேரியில் ஏகப்பட்ட போலீஸ் பந்தோபஸ்து. யாரோ மத்திய அமைச்சர் வருகிறார் என்று அவருக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்காக, பந்தோபஸ்து பணியில் போலீஸ்சார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ராதா தங்கியிருந்த லாட்ஜ் அருகிலும், மூன்று போலீஸ்காரர்கள் பாதுகாப்புப் பணியில் நின்றிருந்தனர். 'இவனுங்க பாதுகாப்பை நம்பியா அந்த மந்திரி வர்றான்; இப்ப பாரு வேடிக்கைய...' என்று கூறிய ராதா, மாடியில் இருந்தபடியே அந்த, மூன்று போலீஸ்காரர்களையும் அழைத்தார்; ராதாவைப் பார்த்ததும் அவர்கள் முகத்தில் சந்தோஷம்.
அவர்களை அறைக்குள் அழைத்துச் சென்றவர், பிராந்தி பாட்டிலைத் திறந்து, 'வாங்க... ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிடுவோம்...' என்றார்.
'இல்லே சார்... எங்களுக்கு, 'டூட்டி' இருக்கு...' என்றனர் போலீஸ்காரர்கள்.
'உங்கள யாரு, 'டூட்டி'யைப் பாக்க வேணாம்ன்னு சொன்னது... சும்மா எனக்குக் கம்பெனி குடுக்கறதுக்காக, ஒரு,'பெக்' சாப்பிடுங்க...' என்றார் ராதா.
'சரி... ஒரு, 'பெக்' தானே...' என்று அவர்களும் சாப்பிட்டனர். ஆனால், ராதா அடுத்தடுத்து ஊற்றிக் கொடுக்க, அவர்களும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தனர். கடைசியில், மூன்று பேரும் முழு போதையில், அதே அறையில் சுருண்டு படுத்தனர்.
ராதா சிரிப்புடன், 'பாருய்யா... இவனுங்க பாதுகாப்பை நம்பி தான், அந்த மந்திரி வரப் போறாரு...' என்று கூறி, அவரும் படுத்துத் தூங்கி விட்டார்.
=============================
'நானும் என் எழுத்தும்' கட்டுரையில், மறைந்த எழுத்தாளர் கு. அழகிரிசாமி எழுதியது: பத்திரிகைத் தொழில் என்பது, திருமணம் போன்றது; பிரம்மசாரிக்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில், அளவிட முடியாத ஆசை. திருமணத்தைப் பற்றி அவன் காண்பவை எல்லாம் பொற் கனவுகள். திருமணம் செய்து கொண்டவனுக்கோ, 'ஏண்டா திருமணம் செய்து கொண்டோம்; இந்த வாழ்க்கையிலிருந்து எப்படி விடுபடுவது...' என்ற தவிப்பு.
இதைப் போல தான், பத்திரிகைத் தொழிலில் புகுவதற்கு ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் ஆசை. அதில் அகப்பட்டுக் கொண்டவனுக்கோ, 'இதை உதறி, வேறு வேலை செய்ய மாட்டோமா...' என்ற கவலையும், ஏக்கமும்!
அச்சடிப்பதற்கு உபயோகிக்கப்படும் கறுப்பு மைக்கு, மந்திர சக்தியோ, மாய சக்தியோ இருக்கிறது. இந்த மையைத் தொட்டு விட்டால் போதும்; அப்பறம் ஜென்மத்துக்கும் விடாது. கறுப்பு மை, அப்பேர்பட்ட பொல்லாத மை!
====================================
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்கள், தஞ்சை நகரில் பல தெருக்களுக்கு, தொழிலாளர்களின் பெயர்களை சூட்டி, புரட்சி செய்துள்ளனர்.
வண்டிக்காரத் தெரு, வாணக்காரத் தெரு, வைக்கோல்காரத் தெரு, கீரைக்காரத் தெரு, அரிசிக்காரத் தெரு, பாம்பாட்டித் தெரு, கொல்லுப்பட்டறைத் தெரு, பாவுக்காரத் தெரு, புல்லுக்காரத் தெரு, பூக்காரத்தெரு, அம்பலக்காரத் தெரு.
- இவையெல்லாம் தஞ்சை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள்.
=======================================
அறிஞர் பெட்ராண்ட் ரசல் சொன்னது: முதல் அத்தியாயத்தில் விறு விறுப்பு இல்லை; பல நண்பர்களுடைய பெயர்களைக் கோர்த்துத் தந்திருக்கிறீர்களே தவிர, அவர்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. இதைப் படிப்பதில், வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. அருமையான நடையில் கதையைத் துவங்கியிருக்கிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், ரொம்ப வளவளா!
ஆகவே, முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, அனாவசிய சரக்கை அப்புறப்படுத்தி, பொருத்தமான அளவுக்கு சுருக்கி, திரும்பவும் கொண்டு வாருங்கள். அமெரிக்க பதிப்பாளர் ஒருவர், யாரேனும் புதிதாக பைபிளை எழுதி வந்து கொடுத்தாலும், இப்படித் தான் சொல்வாராம்.
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி ஐயா....
======================================
இழவு வீட்டிலுமா...
சமீபத்தில், எங்கள் கிராமத்தில், 40 வயதுள்ள ஒருவர் மாரடைப்பால் இறந்து விட்டார். அவருக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உண்டு. அவர் இறந்த செய்தி, எனக்கு காலையிலேயே கிடைத்தாலும், மாலையில் பிணத்தை தூக்கும் போது, துக்க வீட்டுக்கு செல்லலாம் என, வீட்டிலேயே இருந்தேன்.
மதிய நேரத்தில், வீட்டிற்கு வந்த என் நண்பர், 'வா... துக்க வீட்டுக்கு போகலாம்...' என்றார். 'இந்த நேரத்துல போயி என்ன செய்யப் போறோம்; அவங்க சொந்தக்காரங்க வந்திருப்பாங்க... மாலையில் போனா சுடுகாடு வரை போகலாம்...' என்றேன்.
அதற்கு அவர், 'என்னடா நீ... இப்ப போனா தான், நமக்கு, 'சரக்கு' கிடைக்கும்; அதை மெல்ல போட்டுக்கிட்டு இருந்தா, பிணத்தை தூக்கும் நேரம் வந்துவிடும்; வந்து குளிச்சிட்டா, ஒண்ணும் தெரியாது...' என்றார்.
'நான் வரல; நீ போ...' என்று மறுத்து விட்டேன்.
இறந்தவரின் குடும்பம் துக்கத்திலும், எதிர்காலத்தை இனி, எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்...' என்ற கவலையிலும் அழும் போது, அங்கேயும், 'குடி'க்கு அச்சாரமிடும் 'குடி' மகன்களை நினைத்தால், அருவருப்பாக இருக்கிறது.
— பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பட்டுக்கோட்டை.
=========================================
லட்சிய தாய்!
என் நண்பரின், நான்கு வயது பெண் குழந்தைக்கு, பிறவியிலேயே, இடது கை ஊனம். ஆனாலும், குழந்தை படு சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை.
சமீபத்தில், நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அக்குழந்தையின் ஒவ்வொரு செயலும், அசாதாரணமாக இருந்தது.
அதுபற்றி விசாரித்தபோது, அக்குழந்தையின் தாய் என்னை சைகையால் பேசாதிருக்குமாறு சொல்லி, பின், அவள் இல்லாத நேரத்தில், 'என் மகளைப் பார்க்கும் எல்லாருமே, அவள் மீது இரக்கம் காட்டுகின்றனர்; அதை நாங்கள் விரும்பவில்லை. ஊனம் என்ற குறையறியாமலேயே அவள் வளரணும்; அதற்கான எல்லா முயற்சிகளும் செய்கிறோம். பள்ளியிலும், ஆசிரியர்களிடம் இதுபற்றி கவனமாய் இருக்குமாறு கூறியுள்ளோம்...' என்றார்.
இதைக் கேட்ட போது, ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. குழந்தையோ படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டி. புத்தகப் பையுடன் படிக்கட்டில் ஏறுவது, வாகனத்தில் ஏறி, இறங்குவது என, அனைத்தையும் இயல்பாக செய்கிறாள்.
எதிர்காலத்தில் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன், தன் குழந்தையைக் கவனிக்கும் அந்த தாயின் முயற்சி பாராட்டத்தக்கது.
ஊனமுற்றவர்கள் மீது இரக்கம் கொள்வதை விட, ஊனமுற்றவர் என்ற சிந்தனையின்றி, வளர வாய்ப்பளிப்பதே, நாம் அவர்களுக்கு செய்யும் சிறந்த உதவி.
— எஸ்.கோகுல்ராம், சிதம்பரம்.
====================================================
காகிதங்களுக்கு பதிலாக...
மனிதன் கண்டுபிடித்த அற்புத பொருள், காகிதம்; அதை, மனிதனே அழிக்க முற்படுவது பெரிய சோகம். திருமண அழைப்பிதழ், தீபாவளி, பொங்கல், பிறந்தநாள் மற்றும் காதலர் தினத்தன்று வாழ்த்து அட்டைகளை அனுப்புகின்றனர். அவை அனைத்தும், ஒரே வாரத்தில் குப்பைத் தொட்டிக்குள் தஞ்சமடைகின்றன. விலை உயர்ந்த அந்த வாழ்த்து அட்டைகளை குப்பைத் தொட்டியில் பார்க்கும் போது, கண்ணில் ரத்தமே வருகிறது.
பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு கம்பெனிகள், கம்ப்யூட்டர் படிப்புகள் மற்றும் சென்னையின் மூலை முடுக்குகளில் நடக்கும் கண்காட்சிகள் என, விளம்பரப்படுத்தப்படும் ஏகப்பட்ட காகித, 'பிட்'டுகள், நம் வீட்டை நோக்கி, படையெடுக்கின்றன.
குழந்தைகளுக்கு, பள்ளிப் பருவத்திலேயே, காகிதத்தின் மதிப்பும், அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். துண்டு நோட்டீசுகளுக்கு பதிலாக, கை குட்டைகள், துணியில் தைத்த பைகள் அல்லது நம் நாட்டின் நாடியாக விளங்கும் கைவினை பொருட்கள் மூலமாக விளம்பரம் செய்தால், மக்கள் மனதில் பதிய வைக்கலாம்.
ஒரு காகிதத்தை சேமித்தால், ஒரு மரத்தின் கிளை பாதுகாக்கப்படுகிறது; மரங்கள் பாதுகாக்கப்பட்டால், பூமி வளம் பெற்று நல்ல முறையில் மழை பெய்து, நாடும், வீடும் செழிப்பாகும்.
பள்ளிக்கூடங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இதைக் கவனிக்குமா?
— கே.விஜயமோகன், சென்னை.
=============================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=============================================
No comments:
Post a Comment