Followers

Sunday, February 2, 2020



Be entirely pride-less and ego-less and your spiritual progress will be rapid........
ஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. 'அதுவே நான்ஃ என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாமல் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. எவர் ஓங்கார பிரம்மத்தை தியானம் செய்தவாறு இறைவனை நினைத்துக்கொண்டே தேகத்தை உதறுகிறாரோ, அவர் பிறவி எடுத்ததன் பயனை அடைகிறார். இவ்வுலகம் மாயையின் சந்தை. அசலும் போலியுமான பொருள்கள் அபாரம். போலியை அசல் என்று நம்பிப் பொருள்களை வாங்கும் மனிதர்களும் அநேகம்.


அசலையும் போலியையும் அடையாளம் கண்டுகொள்வதில், திறமைமிக்கவர்களும் தடுமாறுகின்றனர். ஆகவே, வஞ்சத்தின் லட்சணங்களைப் (அடையாளங்களைப்) புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கென்றே ஒரு நிபுணரைத் துணையாகக் கொள்ளவேண்டும். அவர் (ஸத் குரு), போலி எவ்வாறு அசல்போலத் தோற்றமளிக்கிறது என்பதை, பார்த்தவுடனே காட்டிக்கொடுப்பார். அஞ்ஞானம் இவ்வாறாக அழியும்.ஆகவே அகம்பாவம்,தற்பெருமையற்று வாழ்ந்தால் விரைவாக சற்குருவின் கிருபையால் ஆன்மீக ஞானம் கைகூடும்.

இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம். சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம். எது எப்படியிருப்பினும், இருசாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்; அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள். —

=====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...