Followers

Thursday, January 16, 2020




பலதும் பத்தும் படித்ததில் பிடித்தவை.....உங்களுடன்...

அனுமனும்  அமெரிக்க அதிபரும்.............................இன்னும் பல..


புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்


அரோகதா அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்


புத்தி, பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.


அமெரிக்க அதிபர் பதவியில் இருந்த ஒபாமா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'உங்களுடைய பாக்கெட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருப்பீர்கள்' என, கேட்கப்பட்டது.


எல்லோர்க்கும் இனிய சூரிய ஒளி வீசிப் பிரகாசிக்கட்டும் சகோ தோழமை களே....................


ஒபாமாவுடன் அனுமன் சிலை:உடனடியாக மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்கிறார்..........


வாஷிங்டன்: ''எனக்கு மூடநம்பிக்கை கிடையாது. அதே நேரத்தில் மனது சோர்வடையும்போது, என் சட்டை பாக்கெட்டில் உள்ள பொருட்களை எடுத்துப் பார்ப்பேன். உடனடியாக மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்,'' என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அவருடைய பாக்கெட்டில் உள்ள பொருட்களில் அனுமனின் சிறிய சிலையும் ஒன்று.


அமெரிக்க அதிபர் பதவியில் இருந்த   ஒபாமா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'உங்களுடைய பாக்கெட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருப்பீர்கள்' என, கேட்கப்பட்டது.


உடனடியாக, தன் பாக்கெட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து காண்பித்தார். போப்பாண்டவர் அளித்த ஜெபமணி, புத்தத் துறவி அளித்த சிறிய புத்தர் சிலை போன்றவற்றுடன், ஒரு இந்தியப் பெண் அளித்த சிறிய அனுமன் சிலையும் இடம்பெற்றுள்ளது.


இதுகுறித்து ஒபாமா கூறியதாவது: ஏதோ ஒரு நம்பிக்கையில், அவர்கள் இந்தப் பொருட்களை கொடுத்துள்ளனர். நான் நம்பிக்கை இழக்கும்போதும், அசதியாக இருக்கும்போதும், மனது சோர்வடையும்போதும், இவற்றை எடுத்துப் பார்ப்பேன். அப்போது, 'நம் மீது பலர் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையுடன் எதையும் சமாளிக்கலாம்' என்ற தெம்பு ஏற்படுகிறது. அதனால் இந்தப் பொருட்களை எப்போதும் என்னுடன் வைத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


காணொலி இணைப்பு....https://www.youtube.com/watch?v=ASNLlNqNr9M
=========================================


புது மருமகளுக்கு...
எங்கள் மகனுக்கு, பெண் பார்க்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் தான் பெண் எடுக்க வேண்டும் என முடிவு செய்து, அதன்படியே செய்தோம். திருமணம் முடிந்து, ஒரு மாதம் சென்றபின், மருமகளிடம், சில நிபந்தனைகளை விதித்தேன். அதாவது, 'நைட்டி என்பது இரவு மட்டுமே அணிந்து கொள்ள வேண்டிய உடை; அதை பகலில் அணியக் கூடாது. அது எனக்கும், மாமாவுக்கும் பிடிக்காது. அடுப்பு என்பது மகாலட்சுமி; எனவே, காலையில் குளித்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். மாலை வரை குளிக்காமல் இருக்கக் கூடாது. அம்மா வீட்டிற்கு போவதானால், இருவரும் சேர்ந்து தான் போக வேண்டும். உன் கணவனை தனியே விட்டு போக கூடாது...' என கூறவும், மருமகளும் புன்னகையுடன் ஏற்று, அதை இன்று வரை, கடைப்பிடித்தும் வருகிறாள்.
பதினைந்து ஆண்டுகள் சென்ற பின்னரும் இன்றும் பேரப்பிள்ளைகளுடன், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறீர்களோ, அவற்றை மணமான புதிதிலேயே கூறிவிடுவது நல்லது.
ஆண்டுகள் கடந்தபின் கூறினால், 'கிழத்துக்கு வேற வேலை இல்லை...' என்ற, அவப்பெயர் தான் மிஞ்சும்.
இளைஞர்களே... நீங்களும் கூட்டுக்குடும்பத்திலேயே பெண் எடுங்கள்; அதன்மூலம் கூட்டுக்குடும்பங்கள் பெருக வழி பிறக்கும்!
டி.மேரிராணி தேவராஜன், மதுரை.


வித்தியாசமான திருமண மொய்!
சமீபத்தில், என் நண்பரின் இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தேன். சாப்பிட்ட பின், மொய் எழுதும் இடத்திற்கு வந்த போது, நண்பரது உறவினர்கள் அனைவரும், தங்கள் பெயரை சொல்லி, ஐந்து ரூபாய் மொய் எழுதினர். அத்துடன், அவர்கள் அனைவருக்கும், கல்யாண வீட்டார் சார்பாக, 100 ரூபாய் மதிப்புள்ள பாத்திரம், அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஆச்சரியம் தாங்காமல் நண்பரிடம் இதுபற்றி கேட்ட போது, 'இது எங்க மூதாதையர் காலத்திலிருந்து தொடரும் பழக்கம். எனக்கு நினைவு தெரிந்து, மொய் வெறும், 50 பைசாவாக தான் இருந்தது. இப்போ, ஐஞ்சு ரூபாயாக உயர்ந்திருக்கு. இந்த, ஐஞ்சு ரூபாயிலும், பெண் - மாப்பிள்ளை என, இரு வீட்டாருக்கும் பாதி பாதியாக பணத்தை பிரித்து கொடுத்துடுவோம்.
'வசதியுள்ளவங்க, 1,000 - 2,000 ரூபாய்ன்னு மொய் எழுதும் போது, ஏழைங்க, 100 - 200 ரூபாய்ன்னு எழுத வேண்டியிருக்கும். வசதி படைத்தவர்களோ, இல்லாதவர்களோ எல்லாருமே எங்களுக்கு ஒண்ணுதான்ங்கிற எண்ணம், உறவினர்களுக்கு வரணும்ங்கிற நல்ல நோக்கத்தோடு, எங்கள் மூதாதையர் உருவாக்கிய செயல் இது...' என்றார்.
கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாருமே இதை பின்பற்றினால், கல்யாண மொய் பிரச்னை ஏற்படாதே!
எம்.பஞ்சாச்சரம், ராமநாதபுரம்.


தோழியின் மின் சிக்கனம்!
என் தோழியின் மகளுக்கு, சமீபத்தில், பெரிய மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்தது. அப்போது, தோழி, ஒரு பெரியவரை அழைத்து, 50 ரூபாயைக் கொடுத்து, 'மண்டபத்துல தேவையில்லாம எங்கே லைட் எரிஞ்சாலும், பேன் சுத்தினாலும் நிறுத்திடுங்க. மண்டபத்தை காலி செய்யற வரைக்கும் கவனமா பாத்துக்கங்க...' என்றாள்.
இதைப் பற்றி அவளிடம் கேட்டதற்கு, 'மண்டபத்துக்காரங்க யூனிட்டுக்கு, 14 ரூபாய் வாங்குறாங்க. அதோட, மின் சிக்கனத்தை வீட்ல தான் கடைப்பிடிக்கணுமா என்ன... இப்படி பொது இடங்களிலும் கடைப் பிடிக்கலாம்...' என்றாள்.
சரியான முடிவு தானே இது!
பி.பூங்கோதை, அறந்தாங்கி.


நேர்பட பேசு!
என் சகோதரியின் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்த போது, பெண் பார்க்க வந்த வரன் வீட்டினர், 'உங்களால முடிஞ்சத செய்யுங்க...' என்று பெருந்தன்மையாய் கூற, அடுத்த சில நாட்களில் நிச்சயதார்த்தம் முடிந்து, கல்யாண தேதி குறித்து, மண்டபமும் பார்த்து விட்டனர். இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டினர், ஒவ்வொரு பொருளாக, 'டிமாண்ட்' செய்ய ஆரம்பித்து, பல லட்சங்களுக்கு, 'பட்ஜெட்' போட, சகோதரி குடும்பம் நிலை தடுமாறியது.
இதனால், மணமகனை அவன் அலுவலகத்தில் சந்தித்த சகோதரியின் மகள், 'ஆரம்பத்திலேயே உங்க எதிர்பார்ப்பை சொல்லியிருந்தீங்கன்னா முடியும், முடியாதுங்கிறத திட்டவட்டமாக சொல்லியிருப்போம்ல... இப்போ திருமணம் வரை கொண்டு வந்து, 'இதைக் கொடு, அதைக் கொடு'ன்னு நிர்பந்திக்கிறது என்ன நியாயம்? இது பற்றி உங்க அப்பா, அம்மாகிட்ட வாக்குவாதம் செய்ய எனக்கு விரும்பமில்ல. வாழப் போறது நாம... உங்க விருப்பமும், அபிப்ராயமும் தான் எனக்கு தேவை. நான் முக்கியமா... இல்ல நகை, பணம் முக்கியமா?
'திருமணத்துக்குப் பின்பும், இப்படி கட்டாயப்படுத்த மாட்டீங்க என்பதற்கு என்ன உத்தரவாதம்... அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா நான் அதிரடியான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்...' என்று உடைத்து பேசினாள்.
பின், எந்த மூச்சு பேச்சும் இல்லாமல், திருமணம் நடந்து, அப்பெண்ணும் சுமூகமாக வாழத் துவங்கி விட்டாள். அவளின் தெளிவும், தைரியமும் எல்லா பெண்களுக்கும் வந்தால் நல்லது!
எஸ்.பத்மாவதி, சேலையூர்.


=============================================
பலதும் பத்தும் படித்ததில் பிடித்தவை.....உங்களுடன்...


==========================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...


Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............. நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!


நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்


அரோகதா


அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத்


ஸ்மரணாத் பவேத்


புத்தி, பலம், புகழ், தைரியம், பயமின்மை, நோயின்மை, சோம்பலின்மை, தெளிந்த வாக்கு ஆகியவை, அனுமனை நினைப்பதால் சித்திக்கும்.


அன்புடன் சகோதரன்
விக்னசாயி.


=============================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...