Followers

Thursday, January 30, 2020



சிந்திக்க வைக்கும் சீனப் பழமொழிகள் சில!

இரவும் பகலும் சிறைச்சாலை மூடியே இருக்கிறது. ஆனால் அது எப்பொழுதும் நிறைந்திருக்கிறது. ஆலயங்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. ஆனால் ஆட்களே இருப்பதில்லை!

தந்தையின் கோபத்தைக் கண்டு மகன் அஞ்சுவதில்லை. தந்தையின் மெüனத்திற்குத்தான் அஞ்சுகிறான்.

ஒருவன் நீதிமன்றத்திற்குப் போகிறான் என்றால் ஒரு பூனையை மீட்க, ஒரு மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்..

ஒரு கேள்வியைக் கேட்பவன் அந்த ஒரு நிமிடத்திற்கு மட்டும் வேண்டுமானால் முட்டாளாக இருக்கலாம். ஆனால் கேள்வியே கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாள்தான்!

கட்டளையின்படி நடப்பதால் கிளிகள் கூண்டில் உள்ளன. கட்டளையின்படி நடக்காதபடியால் காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.

பருவத்தே பயிர் செய்ய சற்று தாமதித்தால்கூட வயல் மனிதனை ஓர் ஆண்டுக்கு தாமதிக்க வைத்துவிடும்.
கஞ்சனாக இருந்து பணம் சேர்ப்பவன் அதனை அதிக நாட்கள் அனுபவிக்கமாட்டான்.

பொய்யனின் நாவு, பாம்பின் நச்சுப் பல்லைவிடக் கொடுமையானது.

நற்பண்பு அரிதாகும்போது அழிவு தானே தேடி வரும்.
முதியவர் ஒருவர் குடும்பத்தில் இருப்பது
ரத்தினம் ஒன்று இருப்பதற்குச் சமம்.

ஒருவன் ஆட்டை மீட்க நீதிமன்றம் போனால், மாட்டை இழக்கப் போகிறான் என்று பொருள்.

பெண்களால் சதா சிரித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் நினைத்தவுடன் அழுவதற்கு அவர்களால் முடியும்.

அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்குச் சமம்.

அளவுக்கதிகமாக தலைவர்கள் தோன்றினால் ஒரு நாடு அழியப் போகிறது என்று அர்த்தம்.

மோசமான அரசாங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட குருடனாக இருப்பதே மேல்.

ரொட்டியின் படத்தை வரைந்து பசியைத் தீர்க்க முடியாது.

● மிகுந்த பண, புகழ், பலம் படைத்தவர்களிடம் பணிபுரிவது புலியைக் கட்டிக் கொண்டு படுத்துக்கொள்வது போல.

● புலியின் மீது சவாரி செய்தால் இறங்குவது கடினம்.

● நீரினால் ஒரு கப்பலை மிதக்கவும் வைக்கமுடியும், அதைக் கவிழ்க்கவும் முடியும்.

● நீரை அருந்தும்போது அதன் மூலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

● புன்னகை செய்யத் தெரியாத ஒருவன் வணிகத்தில் கால் வைக்கக்கூடாது.

● தாகம் எடுக்கும்வரை கிணறு தோண்டுவதை ஒத்திப் போடக்கூடாது.

● ஒரு கையினால் ஓசை எழுப்ப முடியுமா?

● மலர்கள் வெவ்வேறான கண்களுக்கு விதவிதமாகக் காட்சியளிக்கின்றன.

● ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு இரு படகுகளில் நிற்க முடியாது.

● குன்றின் உச்சியில் ஏறாவிட்டால் பசுமையான சமவெளியை ரசிக்க இயலாது.

● தன் கேள்விகளுக்குப் பதில் கிடைக்குமென்பதால் ஒரு பறவை பாடுவதில்லை. தன்னிடம் ஒரு பாடல் இருப்பதால் அது பாடுகிறது.

p-p படித்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன்.

அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கங்கள்`!!!
அன்புடன் vicknasai.

ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
=============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...