Followers

Saturday, February 29, 2020


மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன. * தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை.





29 Feb 2020   
Usual ways of life will not lead you towards God. They must be modified
through spiritual discipline. - Baba

அன்றாடவாழ்வில் அத்வைதம்..........
* மனிதர்களாகிய நமக்கு அத்வைதம் என்ற அனுபவம் கிடைக்காததால் வருந்துவதில்லை. ஆனால், நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால் அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.

* மகாராஜா அரண்மனையில் வசதிகளுடன் தூங்குகிறார். பிச்சைக்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான். தூங்கும்வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவாய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடுகின்றன.

* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுபவிக்கும் நிலை ஒன்று தானே! இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடுகின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வாகவோ, அரசன் தன்னை உயர்வாகவோ எண்ணுவதற்கு இடமில்லை.

* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொன்றுமாக இரண்டு கிடைக்கின்றன. அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகின்றன. இதுவே அத்வைதத்தின் அடிப்படை.

* நாம் வேறு, நம்முடைய அனுபவம் வேறு என்று இரண்டாகப் பிரிந்த நிலையில் நமக்கு மகிழ்ச்சி உண்டாவதில்லை. அத்வைத நிலையில் உணர்பவரும், உணர்வதும் வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது. ஆழமான அமைதியான ஆனந்தமான ஒன்றிய நிலையே அத்வைதம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம்.

தயானந்த சரஸ்வதி




Why is it that at times, even when we do our spiritual practices, we do not experience joy? What should we do to experience happiness? Bhagawan endearingly reminds us today.                      

When you are ill or when your mind is immersed in something else, you will not enjoy the taste of food. So also, when the heart is full of ignorance (tamas) or is wayward, you will not experience joy even when you are engaged in remembrance of the name (nama-smarana), devotional singing, recitation of the name (japa), or meditation. The tongue will be sweet as long as there is sugar on it. Likewise, if the pillar of light called devotion continues to burn in the corridor of the heart, there will be no darkness. The heart will be illumined in bliss. A bitter thing on the tongue makes the whole tongue bitter; when the qualities of greed and anger enter the heart, the brightness disappears, darkness dominates the scene, and one becomes the target of countless griefs and losses. Therefore, those who aspire to attain the holy presence of the Lord must acquire certain habits, disciplines, and qualities.
- Prema Vahini, Ch 56.

Usual ways of life will not lead you towards God. They must be modified
through spiritual discipline. - Baba
=============================

Friday, February 28, 2020


Image may contain: 1 person


என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதை அறிந்த வாலிபன், நண்பரிடம், 'எப்படி நீங்கள் வேறொருவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பீர்கள்?' எனக் கேட்டு, தொந்தரவு கொடுத்துள்ளான்.
கடைசியில்......................


எல்லோர்க்கும் இனிய அன்பு வணக்கம் சகோ தோழமை களே.....


'சில கிழங்கள் வெளியில், 'மகளே...' என்று அழைத்தாலும், உள்ளூர வேறு மாதிரி நினைக்கின்றனர்...' என்று கூறுகிறாள் என் தோழி; இது சரியல்ல என்கிறேன். நான் சொல்வது சரியா, என் தோழி சொல்வது சரியா?...........................தொடர்ந்து படியுங்கள்....


எச்சரிக்கை!


என் நண்பரின் மகள் பிளஸ் 2 படிக்கிறாள். வீட்டின் மொட்டை மாடியில் படிப்பது அவள் வழக்கம். 'படிக்கத் தானே மொட்டை மாடிக்கு போகிறாள்...' என, அலட்சியமாய் இருந்தனர் பெற்றோர். ஆனால், நண்பரின் மகளை, நோட்டமிட்ட பக்கத்து வீட்டு வாலிபன், எப்படியோ அவளை வசியம் செய்து விட்டான். இது நண்பனுக்கும், அவன் மனைவிக்கும் தெரியவர, மகளின் படிப்பை நிறுத்தி, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
இதை அறிந்த வாலிபன், நண்பரிடம், 'எப்படி நீங்கள் வேறொருவருக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைப்பீர்கள்?' எனக் கேட்டு, தொந்தரவு கொடுத்துள்ளான்.
கடைசியில், அந்த பையனுக்கு ஒரு லட்சம் ரூபாய் தந்து, தன் மகளின் வாழ்க்கையில் இனி அவன் தலையிடக் கூடாது என, எழுதி வாங்கினர். காதலிப்பது போல் நடித்து, கணிசமாக கறந்து விட எண்ணும், இன்றைய இளைஞர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
— சி.பார்த்தசாரதி, மதுரை.


நல்லதைக் காட்டுங்களேன்!


நான் பிளஸ் 2 முடித்த பின், பல கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன். அப்போது என் அம்மா, 'பெண்கள் கல்லூரிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும்...' என பிடிவாதம் பிடித்தார். காரணம் கேட்டதற்கு, 'கோ - எட் கல்லூரியில் படித்தால், காதல், 'ஈவ் - டீசிங்' போன்றவற்றால் கவனம் திசை திரும்பி, படிப்பு கெட்டு விடும்...' என்றார்.
கோ - எட் கல்லூரி என்றால், மாணவர்கள் காதலிப்பர் அல்லது காதலுக்கு துணை போவர்; அத்துடன், வகுப்பை, 'கட்' அடித்து சினிமா, பீச் போவர் என, திரைப்படங்களில் காட்டுகின்றனர். இது, என் அம்மாவைப் போன்ற பலர் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதால், என் போன்றோரின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
நான் சேர விரும்பிய சப்ஜெக்ட், கோ - எட் கல்லூரியில் கிடைத்திருந்தும், என் அம்மாவின் கட்டுப்பாடு காரணமாக, அங்கு சேர முடியவில்லை. பெண்கள் கல்லூரியில் எனக்கு விருப்பமில்லாத சப்ஜெக்ட் கிடைத்து, தற்போது அதைத் தான் படித்து வருகிறேன்.
ஐயா சினிமாக்காரர்களே... கல்லூரி என்றால், காதல், கிண்டல் மட்டும் அல்ல; படிப்புடன் திறமைகள் வெளிப்படுத்துதல், சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையும் உண்டு என்பதையும் காட்டுங்களேன்... ப்ளீஸ்!
— கே.ஸ்ரீவித்யா, திருப்பூர்.


மெகா தொடர்களின் லட்சணம் இதுதான்!


'டிவி' மெகா தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கும் நண்பருடன், ஒரு கதை விவாதத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது, அங்கிருந்த ஒருவர், கையோடு கொண்டு வந்திருந்த பேப்பர் கட்டிங்கை காண்பித்து, 'நம் தொடரில், 'டெப்த்' இல்லன்னு போட்டிருக்காங்க...' என்றார்.
உடனே அந்த இயக்குனர், 'அப்ப, 'ப்' எடுத்திடலாம்...' என்றார்.
உதவி இயக்குனர்கள், 'புரியலையே சார்...' என்றதும், 'அது புரிஞ்சா, நீங்க எப்பவோ இயக்குனராயிருப்பீங்களே...' என, மட்டம் தட்டி, 'டெப்த் என்ற சொல்லில், 'ப்' எடுத்துட்டா, 'டெத்' ஆகி விடும்; அத்தொடரில், அக்கதாபாத்திரத்தை சாகடிச்சு, இழவு காட்சிய ஏழெட்டு எபிசோடுக்கு இழுத்திடலாம்; அப்புறமென்ன கதையில், 'டெப்த்' வந்துடும்... என்ன நான் சொல்றது...' என்றார்.
உடனே, இணை, துணை வகையறாக்கள், 'சூப்பர்... சூப்பர்...' என, ஜால்ரா போட்டனர்.
வேதனையுடன் வெளியேறினேன். சீரியல் பார்க்கும் பெண்களின் பலவீனத்தை புரிந்து, இன்னும் எத்தனை காலத்திற்கு தான், அழுமூஞ்சி பார்முலாவை வைத்து, கதையை நகர்த்துவரோ! புதிய சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் என்றைக்கு தான் வாய்ப்பளிப்பரோ... படைப்பாளிகளுக்கே வெளிச்சம்!
- பி.கார்த்திகேயன், சென்னை.


====================================


ஆர்.டி.கோபாலரத்தினம், புதுச்சேரி: பேசியே காரியம் சாதிப்பவர்களையும், அடுத்தவர்களை ஏவியே காரியம் சாதிப்பவர்களையும் எப்படி அழைப்பது?
கெட்டிக்காரன்... சிறந்த நிர்வாகி, கடுமையான போட்டி நிலவும் இந்த உலகில், 'பிழைக்கத் தெரிந்தவன் என அழைக்கலாம். நீங்கள் குறிப்பிடும், 'குவாலிட்டீசை' வளர்த்துக் கொண்டவன் என்றும் சோடை போக மாட்டான்!


எம்.சுப்புலட்சுமி, திண்டிவனம்: 'சில கிழங்கள் வெளியில், 'மகளே...' என்று அழைத்தாலும், உள்ளூர வேறு மாதிரி நினைக்கின்றனர்...' என்று கூறுகிறாள் என் தோழி; இது சரியல்ல என்கிறேன். நான் சொல்வது சரியா, என் தோழி சொல்வது சரியா?
வயது ஒரு பொருட்டே அல்ல; எந்த வயதிலும், ஆண்கள், ஆண்களாகத்தான், 'பிஹேவ்' செய்வர். 'வயதானால் என்ன... மனதில் நான் இன்னும் இளைஞன் தான்...' என்று பெருமை வேறு அடித்துக் கொள்வர். இது சகஜம்; பெரிசுகளின் நடிவடிக்கை, பார்வை சரியில்லை என்றால், 'நைசாக' நழுவிக் கொள்வது நல்லது!


சி.எம்.ஹெலன், பரமக்குடி: எனக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகளாகின்றன. கொழுத்த, சதை பற்றுள்ள சிவப்பழகியாக நான் இல்லை என்று, என்னை வெறுக்கிறார் என் கணவர். மூன்று குழந்தைகளுக்குத் தாயான நான், பெரும் கவலையில் உள்ளேன்...
வெளித் தோற்றத்திலும், அழிந்து போகும் அழகிலும் மையல் கொள்ளும் கணவன்மார்களுக்கு, 'மைல்ட் ஷாக் ட்ரீட்மென்ட்' கொடுத்தால் திருந்த வழியுண்டு. 'அவரது உயரத்தை பார்த்தீர்களா... இவரது தொந்தி இல்லாத வயிறு நல்ல அழகு; அஜித்தின் தாடி சூப்பர்...' என்று அவ்வப்போது கள்ளமில்லாமல் சொல்வது போல் ஊசி ஏற்றுங்கள். தன்னையும், 'கம்பேர்' செய்து பார்த்து, திருந்த வழி உள்ளது. ஆனால், அவர் மனம் நோகும் அளவுக்கோ, சந்தேகம் எழும்படியோ அஸ்திரத்தைப் பயன்படுத்தி விடாதீர்கள்!


எம்.மணியன், கோடாங்கிபட்டி: சினிமா நடிகையரின் திருமண வாழ்க்கை பெரும்பாலும் விவாகரத்தில் முடிவது ஏன்?
விவகாரத்தில் தானே ஆரம்பிக்கிறது; முடிவு, விவாகரத்தாகத் தானே இருக்கும்!


எம்.ஞானசம்பந்தன், பாலமேடு: என் அவள், என் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறாள். ஆனாலும், இன்னும் இரண்டு, மூன்று பேரை அவள், 'பார்ப்பதாக' எனக்குத் தோன்றுகிறது. இந்தக் குழப்பத்திலிருந்து நான் வெளி வர வழி சொல்லுங்களேன்...
சந்தேகப் பேய் உங்களை விழுங்கு முன், நீங்கள் அதை விழுங்கி, ஏப்பம் விடுங்கள். தெளிவடைந்து விடுவீர்கள்!


மொ.முத்தரசன், சென்னை: நாகரிக வளர்ச்சி பெண்களை உயர்த்தி, வாழ வைக்கிறதா, வீழ வைக்கிறதா?
ஒரு உண்மையை சொல்லட்டுமா? பெண்கள் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், 'வீழ' வைக்கிறது என்றே சொல்வர். நாகரிக வளர்ச்சியுடன் பெண்கள் ஒத்துப் போவது, சமுதாயம் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தில் பெரும் முன்னேற்றம், மாறுதல் தெரிகிறது. பெண்களின் இந்த வரவேற்கத்தக்க மாற்றம் விரைவில் ஒரு சமூகப் புரட்சி ஏற்பட அஸ்திவாரமாக அமைந்து வருவது நன்கு புலப்படுகிறது!


அன்பு நன்றி சகோ அந்துமணி


=============================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
===================================


  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...