Followers

Monday, August 31, 2020

 

கோள்களின் தொழில் காரகத்துவங்கள்

சூரியன்பகவான்

அரசு நிர்வாகம். உணவுத்துறை, மருத்துவம்,ரசாயனம்

காடு,மலை சம்பந்தப்பட்டவை,தரகு எருமரங்கள்,பொன் வணிகம்,

மருந்துக்கடை,ஆலைகள்,அரசுமரியாதை,கோதுமை, அரசுத்துறை

கம்பளங்கள். நாணயச்சாலை,நவரத்தினக் கற்கள்,புதை பொருள்

ஆய்வு, வானொலி,மருத்துவர்,சக்தி பூஜை,யாகம் செய்தல்,செம்பு

தங்க வியாபாரம்.

 

சந்திரன்பகவான்

 

கடல்,மீன் தொடர்பு,பால்,ஆராய்ச்சி,நுண்கலை,துணிகள்ஒப்பந்தம்,

பொன் அணிமணிகள், பயிர்த் தொழில், கடல்பொருட்கள்

கற்பனைத் திறன், வெள்ளி, முத்து, வெண்மைத் நிற தொடர்பு

அதன் தயாரிப்பு நிறுவனம்,உணவுவிடுதி,அணைக்கட்டு,மதுக்கடை,

ஏஜென்சி, ஏற்றுமதி, இறக்குமதி, காய்கறி, பட்டு,பயண நிறுவனம்,

பெட்ரோல்,பழங்கள், நெய்,தேன்,செவிலியர்.

 

செவ்வாய்பகவான்

 

உலைக்கூடம், சுரங்கம், இராணுவம், காவல்துறை, மின்துறை,

புரா தனப்பொருள், இரயில்வே, தாதுப் பொருட்கள்,அறுவை

சிகிச்சைக் கருவிகள்,துப்பாக்கி, சித்த மருத்துவம்,ரௌடி,

பொறியியல் துறை,கசாப்புக் கடை, கள்ளக்கடத்தல், சிறைச்சாலை,

ரியல் எஸ்டேட், உரம்,பூச்சிமருந்து, தொழிற்சாலைகள், வெடிமருந்து, மத்தாப்புத்தொழில்கள்இரும்பு, கிரிமினல்வக்கீல்,விவசாயம்,

சோதிடம், மாமா,விலைமகள்,செங்கல் சூளைகள்,கற்பூரம்,விமானி,

திருட்டு,சூதாடுதல்,பயிரிடுதல்,தீப்பெட்டித் தொழில்.

 

புதன்பகவான்

புத்தகம்,பத்திரிக்கை,ஸ்டேஷனரி,கவிதைகள்,போக்குவரத்துத்

துறை,தொலைபேசி,கடிதப்போக்குவரத்து, சோதிடம், வழக்கறிஞர்,

தணிக்கை,நிருபர் நீதிபதி ஆசிரியத்துறை,கவிதைகள்,நெசவு,

தொலைக்காட்சி,எழுத்தர், கைத்தொழில்கள், விளையாட்டுத்துறை,

கல்வித்துறை, நூல்நிலையம், புள்ளிவிவர ஆய்வாளர், தூதரகம்,

விமானி,பேச்சாளர்,இசையமைப்பு,சினிமா,நகைச்சுவை,குத்துச்சண்டை,

தபால்காரர்,நடனஅரங்கம் அமைத்தல்,தர்க்க சாஸ்த்திரம்.

 

குருபகவான்

 

சட்டம்,நீதி போதனை,அரசியல், ஆன்மீகம்,கோவில்,மதம்

தொழிலாளர் நலம், அறநிலையத்துறை, உயிர் பாதுகாப்புத் துறை,

நிதி நிறுவனம்,சோதிடம், தருமஸ்தாபனம், பொருளாதாரத்துறை,

தங்கம்,டியூசன்,செல்வம்,செல்வாக்கு,,நிர்வாகம்,நீதித்துறை,மந்திரி,

அமைச்சரவை,வங்கித்துறை,கருவூலம்,கல்விநிலையம்,பொன்நகை

பட்டுஜவுளி,மஞ்சள்,சீரகம்,கரும்பு,கரும்பாலை,ஆசிரியர்,பேராசிரியர்

பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்.

 

சுக்கிரன்பகவான்

 

கலைத்துறை,வாகனம்,ஓட்டல்,குதிரைரேஸ்,பெண்,

 

சம்பந்தப்பட்ட துறை, போதை வஸ்துக்கள், பல்பொருள் அங்காடி,

டிரான்ஸ்போர்ட்,பல் கட்டும் தொழில்,சுக அமைப்புடைய தொழில்,

தரகு,கூட்டுறவு,இன்டீரியர் டெக்கரெஷன், ப்யூட்டி பார்லர்,பேக்கரி,

மதுபானம்,சினிமாதயாரிப்பு,விநியோகம்,பழம்,புஷ்பங்கள்,

வெற்றிலை பாக்குக்கடை, தொலைக்காட்சி, வானொலி,

வீடியோ,நடனம்,கலை, வண்ண ஓவியர், இனிப்புப்

பண்டங்கள்,கணினி, ஆடம்பரப்பொருட்கள்.

 

சனிபகவான்

 

நிலக்கரி, கடினஉழைப்பு, ஊர்பஞ்சாயத்து, கழிவுப்

பொருட்கள்,ஆயில், இரும்பு,, எந்திரம், மரம், உரம்,மயானசாலை,

சிறைச்சாலை,உதிரிபாகங்கள்,கால்நடைகள்,சுயமுயற்சி,விவசாயம்,

கருப்பு நிற பொருட்கள், இன்ஷியூரன்ஸ், மருந்து ஏமாற்றுதல்,

ஆட்களைவேலைக்குஅமர்த்துதல்,கச்சாஎண்ணை,சுகாதாரப்பணிகள்

சிமிண்ட்,மொசைக்கற்கள்தயாரிப்பு,ஸ்பெகுலேஷன்.ஆட்டோமொபைல், ஏர்லைன்ஸ்,தாசில்தார்,கர்ணம்,லேபர்டிபார்ட்மெண்ட்,

எண்ணெய்வித்துக்கள்,தார்ரோடு,நீலநிற பொருட்கள் சமையல்

எரிவாயு,ரயிலிவே பாரசல்..

 

ராகுபகவான்

 

மின்னணுத் துறை,விஷத் தொடர்பு, பயிர் வஸ்துக்கள்,

எக்ஸ்போர்ட், ஒற்றர்பணி, சர்க்கஸ் நிறுவனம், மணி மந்த்ர

ஓளஷதம்,அரசுக் கெதிரான தொழில்கள்,அந்நிய நாட்டுத் தொழில்,

புகையிலை, சீசன் தொழில்கள், ஷேர், கமிஷன் காண்ட்ராக்ட்,

ஏஜென்சி,கடத்தல் தொழில்.

 

கேதுபகவான்

 

மருத்துவம்,மதபோதனை,மதுபானம்,கைரேகை,தூதரகம்,

சிறைசாலை, வான்வெளி ஆராய்ச்சி,தோல்,லாகிரிவஸ்துக்கள்,

புண்ணிய யாத்திரை,வர்ணம் பூசும் வேலை, சித்திரம், ஆன்மீகம்,

தத்துவம்,மறுவாழ்வுத் துறை,கத்தி,புளிப்பு,புரோகிதம்,ஞானம்,

கபடம்,நாடுவிட்டு ஓடி வாழும்நிலை.

===============================================

திசா புத்தி பலன்கள்:;;;;

ஒரு ஜாதகத்தில் எந்த தசை நடந்தாலும் அந்த திசையை 12 ஆக பிரிக்க வேண்டும் 12 கட்டத்திற்கு பிரித்து கொடுக்க வேண்டும் சூரிய திசை 6 வருடம் இந்த சூரிய திசையை 12 ஆக பிரித்தால் ஆறு மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு......................

சந்திர திசை 10 வருடம்

இந்த சந்திர தசையை 12 ஆக பிரித்தால் 10 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு 10 மாதம்

செவ்வாய் திசை 7 வருடம் இந்த செவ்வாய் திசையை 12 ஆக பிரித்தால் 7 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

ராகு திசை 18 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 18 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

குருதிசை 16 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 16 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

சனி திசை 19 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 19 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

புதன் திசை 17 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 17 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

கேது தசை 7 வருடம் இதை 12 ஆக பிரித்தால் ஏழு மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

சுக்கிர திசை 20 வருடம் இதை 12 ஆக பிரித்தால் 20 மாதம் வரும் ஒரு கட்டத்திற்கு

235:-திசாநாதன் நிற்கும் இடத்தில் இருந்து அந்த மாதத்தை போட்டு கழித்துக் கொண்டே போக வேண்டும்

236:-திசாநாதன் தான் நின்ற இடத்திலிருந்து பயணிக்கும்போது சுப கோள்களை தொடும் பொழுது சுபப் பலன்களும் சனி கேது பாவ கிரகங்களை தொடும் பொழுது தடை தாமதங்களும் கஷ்டங்களையும் சொல்கிறது

 

337:- பாவிகளை தொடும் பொழுது அவர்கள் சுப ஆதிபத்யம் பெற்று இருந்தால்( 5 9) அந்தக் காலங்களில் நற்பலன் கிடைக்கிறது சுப ஆதிபத்யம் என்பது 5 9 ராகு-கேது வராது

238:- திசாநாதன் 12 கட்டங்களை சுற்றிவரும் பொழுது பாக்கியாதிபதி புண்ணியாதிபதியை தொடும் பொழுது நல்ல பலன்களை தருகிறது (5:9)

239:- சுப கிரகங்களை தொடும் பொழுது நல்ல பலன்களும் பாவிகளை தொடும்பொழுது சிரமங்களையும் கஷ்டங்களையும் தருகிறது

240:- சனி கேது மாந்தியை தொடும் பொழுது நிறைந்த சிரமங்களையும் கஷ்டங்களையும் தருகிறது

 

241:-அந்த நேரத்தில் எந்த கிரகமாக இருந்தாலும் சரி ராகு கேது தவிர அந்த கிரகங்கள் 5 9 உடையவர்களாக இருந்தால் நல்ல பலன்களை தருகிறது

 

242:-காரக ரீதியாக அந்த கிரகம் அமர்ந்த பாவ உயிருக்கு சேதம் விளைவிக்கிறது கிரகம் பாவி பாவியை தொடும்பொழுது ஆனால் ஜாதகருக்கு நன்றாக இருக்கும்

 

243:-4ல்சனி உள்ளது என்றால் சனி 5 9-க்குடையவர் ஒரு கிரகம் திசை நடத்தி நாலாம் இடத்திற்கு வருகிறது என்றால் அங்கு சனி உள்ளது சனி பாவி ஜாதகருக்கு இடம் சம்மந்தப்பட்ட வீடு இடித்து கட்டக்கூடிய நிலை வரும் தருகிறது அதே நேரத்தில் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கும் தந்தைக்கும் பாதிப்பு இருக்கும்

244:-சூரியனை தொடும் காலம் எந்த தசை நடந்தாலும் திசாநாதன் சூரியனை தொடும் காலம் வெளிச்சத்திற்கு வந்துவிடலாம் புகழ் சூரிய திசை வளர்ச்சி சூரியன் யாரை தொடுகிறது அவர்களுக்கு வளர்ச்சி கொடுக்கும்

245:-கேந்திராதிபத்திய தோஷம் கேந்திரங்களுக்கு சுபர்கள் அதிபதி இன்னொரு கேந்திரத்தில் சுபர் அமர்வது 1 4 7 10

கேந்திராதிபத்திய தோஷத்தில் குருவின் தோஷம் வலுவானது குருவிற்கு கேந்திர பார்வை 7ம் பார்வை

குருவின் 7ம் பார்வையில் உள்ள கிரகம் பெரிய பலனை அனுபவிக்காது அனுபவிப்பது இல்லை ஆன்மீக நாட்டம் வரும்

=============================================================

 

====================================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...